ரீல்ஸ் மோகம் பலரையும் ஆட்டுவிக்கிறது. குறிப்பாக புதுமண தம்பதிகள் வித்தியாசமான இடங்களுக்கு சென்று ரீல்ஸ் எடுத்து அதை பதிவிடுகின்றனர். அதுபோல ராஜஸ்தான் மாநிலம் பாலியில் உள்ள கோராங்கட் பாலத்தில் வீடியோ எடுப்பதற்காக புதுமணத் தம்பதிகள் சென்றனர். அப்போது திடீரென ரயில் வந்ததால், ஒதுங்க இடம் இல்லாமல் 90 அடிக்கு கீழே உள்ள ஓடையில் குதித்தனர். இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், கணவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.