பாஜக வேட்பாளருக்கு நடிகை ஷோபனா ஆதரவு

28678பார்த்தது
பாஜக வேட்பாளருக்கு நடிகை ஷோபனா ஆதரவு
கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு நடிகை ஷோபனா ஆதரவு அளித்துள்ளார். நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷோபனா, மக்களவைத் தேர்தலில் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளேன். பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் திங்கள்கிழமை நான் கலந்து கொள்வேன். அவருடைய தேர்தல் வெற்றிக்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்தார். திருவனந்தபுரம் தொகுதியில் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக காங்கிரஸின் தற்போதைய எம்.பி. சசி தரூர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பானியன் இரவீந்திரன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.