சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்

58பார்த்தது
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இயங்கி வரும் உணவகத்தில் நேற்று இரவு (ஜூன் 15) சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட ஏழுமலை என்பவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அஷ்வீன் (12) என்ற சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற நான்கு பேரும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி