ஆகஸ்ட் மாதத்திற்கான கார் விற்பனை, 1.06 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 3.47 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆகஸ்டில், 3.43 லட்சம் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. முன்னணி கார் நிறுவனங்களான ஹூண்டாய், டாடா, மாருதி ஆகியவற்றின் விற்பனையும் சரிந்துள்ளது. மாருதியின் குறைந்த விலை கார்களின் விற்பனை, 18.85 சதவீதம் குறைந்துள்ளது. ஹோண்டா கார்களின் விற்பனை, 32.42 சதவீதம் குறைந்துள்ளது.