உருவாகிறது எஸ்.ஜே.சூர்யா - ஃபகத் ஃபாசில் காம்போ

81பார்த்தது
உருவாகிறது எஸ்.ஜே.சூர்யா - ஃபகத் ஃபாசில் காம்போ
மலையாளத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பாசில் ஜோசப் மற்றும் தர்ஷனா நடிப்பில் 'ஜெய ஜெய ஜெய ஹெய ஹே' படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய விபின் தாஸ் தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளைத் தொடங்கயுள்ளார். இபடத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்க இருக்கிறார். ஃபகத் ஃபாசிலுடன் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்களால் எஸ்.ஜே சூர்யா நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படுபவர். அதே போல் மலையாளத்தில் நடிப்பு அரக்கன் என்று ஃபகத் ஃபாசிலை சொல்லலாம். இந்த இரு நடிகர்களையும் ஒரே திரையில் பார்ப்பது என்பதே ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி