அதிமுக தோற்றுப்போக வாழ்த்துகள்.. மன்சூரை விரட்டிய தொண்டர்கள்

67972பார்த்தது
வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பசுபதி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதே நேரம் சுயேட்சை வேட்பாளர் மன்சூர் அலிகானும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பசுபதியை பார்த்த மன்சூர், “அம்மாவை கொன்று விட்டு ஓட்டு கேட்க வந்துட்டீங்களே பாவிகளா?, நீங்கள் தோற்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” எனக் கூறிவிட்டு சென்றார். இதனால், ஆத்திரமடைந்த அதிமுகவினர் பைக்கில் மன்சூர் அலிகானை விரட்டிச் சென்றனர். அவர் நேராக பள்ளிவாசல் உள்ளே சென்றுவிட்டார். இதானால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

நன்றி: தினமணி

தொடர்புடைய செய்தி