120 அடி தேர் கவிழ்ந்து விபத்து (வீடியோ)

62356பார்த்தது
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஹஸ்கூர் என்ற இடம். இங்கு ஸ்ரீ மதுரம்மா திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் திருவிழாவின்போது 120 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சாலை முழுவதும் அதிகமான மணல் மற்றும் கற்கள் இருந்த காரணத்தினால் தேர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பொதுமக்கள் யாரும் சிக்கிக்கொள்ளவில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி