தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல்லில் இரண்டு மாதத்திற்கு மேலாக பராமரிப்பு பணிகள் காரணமாக காவிரி ஆற்றில் பரிசல் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் ஓரளவிற்கு முடிந்த நிலையில் ஒகேனக்கல்லில் இன்று(மே 9) முதல் பரிசல் பயணம் துவக்கப்பட்டதால் ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக பரிசல் ஓட்டிகள் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.