சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ். புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் ஹஜ்ரத் பீர் சுல்தான் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் 874 ஆம் ஆண்டு மூவின மக்கள் பங்கேற்ற மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக மதநல்லிணக்க சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 12 ம் தேதி ஹஜ்ரத் பீர் சுல்தான் தர்ஹா அருகே கொடியேற்றத்துடன் சந்தனகூடு விழா துவங்கியது. இதையொட்டி 10 ஆம் நாளான இன்று கரிசல்பட்டி ஊரின் மையப்பகுதியில் உள்ள மச்சு வீட்டு அம்மா தர்ஹாவில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சந்தனகூடு அருகே கே. புதுப்பட்டி, வலசைப்பட்டி, கரியாம்பட்டி இந்து மக்களும், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கரிசல்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் என மூவின மக்கள் ஒன்று சேர்ந்து பாத்திஹா ஓதி மச்சு வீட்டு அம்மா தர்ஹாவில் இருந்து அதிகாலை 3 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு பள்ளிவாசல் அருகே நின்றது. அங்கு கண்கவர் வானவேடிக்கை நிகழ்வு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.