ராயன்கருப்பன் கோவிலில் மாசிக்களரி திருவிழா

56பார்த்தது
சிவகங்கை மாவட்டம்சிங்கம்புணரி அருகே ராயன்கருப்பன் கோவிலில் இரவு முழுவதும் மாசிக்களரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் சிங்கம்புணரி முழுவீரன் கோயில் வீட்டில் இருந்து சுவாமிகரகம், அறிவாள், உள்ளிட்ட ஆயுதங்களை மேளதாளம் முழங்க பக்தி பரவசத்துடன் தலையில் சுமந்து கருப்பசாமி ஆட்டத்துடன், வான வேடிக்கைகள், பட்டாசுகள் வெடித்து புது வயல் பகுதியில் உள்ள கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கே கிடா பலியிட்டு சாமிஆட்டம்இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் நடைபெற்றது பாரம்பரியமாக அறிவாளில் ஏறி நின்று சாமி அருள்வாக்கு கூறியும், ஆனி செருப்பு அணிந்துகொண்டும், கையில் தீப்பந்தம் ஏந்தியும், சாமி ஆட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி