இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கு தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு "ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள்" வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சர்வோட்டம் ஜீவன் ரக்க்ஷா பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு, உத்தம் ஜீவன் ரக்க்ஷா பதக்கம் துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு, ஜீவன் ரக்க்ஷா பதக் தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி போராடி உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2024-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ” ஜீவன் ரக்க்ஷா பதக்கம்” விருது குறித்த விபரங்களை http: //awards. gov. in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொண்டு, இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்தல் வேண்டும் மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கைளை வருகின்ற 28. 06. 2024 ஆம் தேதி மாலை 04. 00 மணிக்குள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மூன்று நகல்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்று சமர்பித்தல் வேண்டும்.