திமுகவின் சாதனைகளை துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு

50பார்த்தது
தமிழகத்தில் திமுகவின் 75 ஆண்டு கால சாதனைகளை கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து திமுகவின் 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டமாக தற்சமயம் நடைபெற்று வருகிறது. அதன் பிரதிபலிப்பாக "திசை எங்கும் திராவிடம்" என்னும் தலைப்பில் தமிழகமெங்கும் திமுகவின் பல்வேறு சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நடவடிக்கைகளில் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று மாலை திருப்பத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் கரகாட்டம் தப்பாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் வாயிலாக திமுகவின் சாதனைகளை கலைக்குழுவினர் கலைநயத்தோடு தெரியப்படுத்தியதோடு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி