தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கையிலுள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரமேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் பொதுச் செயலாளர் பொன்னுபாண்டி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டம் முழுவதும் உள்ள வட்டக்கிளை மற்றும் மாவட்டக்கிளை தேர்தலை பிப்ரவரி மாதத்திற்குள் நடத்தி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதில், துணைத் தலைவர் பி. பாண்டி மற்றும் ஏராளமான நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கலைமணி நன்றி கூறினார்.