சிவகங்கை மாவட்டம் பிரான்மலை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி கி. பி 1889 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது 136 ஆண்டுகளை கடந்து எண்ணற்ற சாதனைகளை புரிந்த இந்த அரசுப் பள்ளியின் 136 வது ஆண்டு திருவிழா, விளையாட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமரன் முன்னிலையில் நூற்றாண்டு சுடர் ஏற்ற பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர் பொன்னம்பல அடிகளார் பேசும் பொழுது இந்தியாவிலேயே அறிவியலை, தொழில்நுட்பத்தை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்ததற்காக சயின்ஸ் பாப்புலரேஷன் என்ற மத்திய அரசின் விருதைப் பெற்ற முதல் மடாதிபதி குன்றக்குடி அடிகளார் தான். இந்த நூற்றாண்டு கண்ட அரசு பள்ளியில் தான் அறிவியல் கண்காட்சி நடந்தது எல்லா ஏழைக் குழந்தைகளும் வளர வேண்டும் உயர வேண்டும் என்பதால் இந்த பள்ளி உருவானது ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர்களும் பாடுபட்டு வருகின்றனர். அரசு பொறுப்பேற்ற பின்பு தாராளமாக நிதியுதவி செய்து புதிய கட்டிடங்கள் கட்டித் தந்துள்ளதை சுட்டிக்காட்டி அவர்களுக்கு நாம் நன்றி கூறகடமைப்பட்டுள்ளோம் என்றார்.