பாதயாத்திரை துவக்கவிழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

50பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள பழனி கோவில் வீட்டில் 425 ஆம் ஆண்டு கட்டளைக் காவடி பழனிபாதயாத்திரை துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த உயர் நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார். அப்போது பேசுகையில் நான் 25 ஆண்டுகளாக உயர் நீதிமன்றநீதிபதியாக இருந்துள்ளேன் ஒரு லட்சம் தீர்ப்பு சொல்லி இருக்கேன் இந்த ஒரு தீர்ப்பு கூட நான் சத்தியமாக சொன்னதில்லை எல்லாம் அவர் சொன்னது தான். பர்மா, சிலோன் எல்லாம் போச்சு ஆனால் நகரத்தார் சமூகம் மட்டும் கீழே போகவில்லை அதற்கு பக்தியும் தர்மமும் தான் காரணம். பக்திக்கு வயது கிடையாது எந்த வயதிலும் பக்தி வரும். பக்தியும், தர்மமும் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் உண்டு எனக் கூறி பக்தர்கள் மத்தியில் உணர்ச்சி பொங்க ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி