சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் குன்றக்குடியில் பழனி நோக்கி பயணத்தை தொடங்கி பாதயாத்திரையாக சிங்கம்புணரிக்கு வந்தனர். வழியெங்கும் அன்னதானம் செய்தும், முருகப்பெருமானின் பக்தி பாடல்களை பாடியவாறும் பக்தர்கள் சிங்கம்புணரியில் இருந்து பழநி நோக்கி கோஷமிட்டு புறப்பட்டு பிப்ரவரி 11ம் தேதி பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.