சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பணிமனையில் இருந்து திருப்பத்தூர் சிங்கம்புணரி வழியாக ஒடுவன்பட்டி மேலவண்ணாரிருப்பு மலைப்பாதையில் ஏறி தினசரி பொன்னமராவதி சென்று வருகிறது. இன்று 11 ம் நம்பர் TN 63 N 1490 என்ற எண் கொண்ட அரசு பேருந்து சிங்கம்புணரியில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு ஒடுவன்பட்டி மேலவண்ணாரிருப்பு மலைப்பாதையில் ஏறி உள்ளது. பழைய மாடல் பேருந்துகள் என்பதால் மலைப்பாதையில் ஏற முடியாமல் திணறி பின் நோக்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்து 30 க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மலை உச்சியை நோக்கி கால் நடையாக நடந்து சென்று மலை உச்சியில் சென்று நின்ற அரசு பேருந்தில் ஏறி மீண்டும பயணம் செய்தஅவலம் இன்று அரங்கேறியது.
கடந்த வாரம் இதே மலை பகுதியில் அதே பணிமனையை சேர்ந்த 10ம் நம்பர் அரசு பேருந்து மலையில் ஏற முடியாமல் திணறி பின் நோக்கி வந்ததால் பேருந்து நடத்துனர் பாறாங்கல் தூக்கி கொண்டு நடத்துனர் பேருந்து பின் புறம் நடந்து சென்ற வீடியோ வைரல் ஆன நிலையில் மீண்டும் அதே பணிமனையை சேர்ந்த 11 ம் நம்பர் அரசு பேருந்தும் மலையில் ஏற முடியாமல் பயணிகளை நடந்து வரச்சொல்லி ஏறிச்சென்ற சம்பவ வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.