சிவகங்கை நேருயுவகேந்திரா, இந்திய ஓஷுகான் கராத்தே பள்ளி, சிவகங்கை சிவம் மார்ஷியல் கலை பயிற்சி அகாதெமி இணைந்து நடத்திய மாநில கராத்தே போட்டி திருப்பத்தூர் சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
தொடக்க நிகழ்வுக்கு கராத்தே தொழில் நுட்ப இயக்குநர் எம். ராஜசேகரன் தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் மனோகரன், டி. கே. ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேருயுவகேந்திரா முன்னாள் ஒருங்கிணைப்பாளர் கே. ஜவஹர், சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர் எம். பரமசிவம், இந்திய பாரம்பரிய சிலம்பக்கலை சங்க மாவட்டச் செயலர் கே. செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் சேவியர், இந்தோ-திபெத் காவல் பயிற்சி நிலைய கமாண்டன்ட் வி. ஆர். சந்திரன், தொழிலதிபர் பசும்பொன். ராமச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சி. ரமேஷ்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தென்காசி உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு மாலையில் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. நிறைவில் சிவகங்கை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் தலைவர் பி. கோபி நன்றி கூறினார்.