பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மலை தேனீக்கள்

61பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் குடியிருப்பு பகுதியில் உள்ள மரத்தில் 40 அடி உயரத்தில் மலைத்தேனீக்கள் கூடுகட்டி இருந்துள்ளது. அவ்வப்போது காற்றினால் கூடு கலைந்து தேனீக்கள் பறந்து மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. இது குறித்து நிலைய மருத்துவர்கள் சிங்கம்புணரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் மருத்துவமனை ஜன்னல் கதவுகளை மூடி தேனிக்கள் கூட்டினை நீண்ட நேரம் போராடி தீ வைத்து விரட்டி அடித்தனர். இதனால் நோயாளிகளும், அவர்களோடு வரும் உறவினர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் நிம்மதியடைந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி