மேலநட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

76பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி மாணாக்கர்கள் ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் வட்டார அளவில் நடைபெறும் விளையாட்டு மற்றும் அனைத்து விதமான போட்டிகளிலும் இப்பள்ளி மாணாக்கர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை குவித்து வருகின்றனர். வண்ண, வண்ண கண்ணைக் கவரும் விளக்குகளை எரியவிட்டு, செல்போன் அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாரம்பரிய கலைகளான பரத நாட்டியம், சிலம்பம், ஓரங்க நாடகம், 90 கிட்ஸ், -2கே கிட்ஸ் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து நாடகங்கள் மூலம் நடித்துக் காட்டினர். இதேபோன்று பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்வி, விளையாட்டு, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன. ஆண்டு விழாவில் மேலநெட்டூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

தொடர்புடைய செய்தி