மந்திக்கண்மாய் பகுதியில் ஆட்டை திருடி சென்றதாக வழக்கு

564பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள மந்திக் கண்மாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (54). இவர் கடந்த ஐந்து வருடங்களாக ஆடு மேய்க்கும் தொழில் மேற்கொண்டு வரும் நிலையில் இவரிடம் 50 ஆடுகள் உள்ளது. இவர் ஆடு மேய்ச்சல் முடிந்தவுடன் அவரது தோட்டத்தில் அடைத்து வைத்துள்ளார்.

அந்த தோட்டத்தில் இருந்து ஒரு ஆட்டைஅடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஜெயராஜ் காளையார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் குகன் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி