ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும். ஆனால் டிக்கெட் எடுக்காமலேயே இலவசமாக பயணிக்கும் ரயில் இந்தியாவில் இயக்கப்படுகிறது என்பது தெரியுமா? ஆம்! 75 ஆண்டுகளாக இலவச ரயில் சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது பக்ரா-நங்கல் ரயில். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நங்கல் என்ற இடத்தில் இருந்து இமாச்சலபிரதேசத்தில் உள்ள பக்ரா கிராமத்திற்கும் இடையே 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது.