சரக்கு வாகன உரிமையாளரை கொலை செய்த வழக்கில் 4 பேர் கைது

64பார்த்தது
சிவகங்கையில் சரக்கு வாகன உரிமையாளரை கடந்த வியாழக்கிழமை இரவு கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை காளவாசல் பகுதியில் வசித்து வந்தவர் ராஜபாண்டி (46). இவர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிவகங்கை மரக்கடை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் காவல்ஆய்வாளர் அன்னராஜ் வழக்கு பதிவு செய்தார். இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் சிவகங்கை காமராஜர் காலனியை சேர்ந்த இத்திராஜா(24) அவரது தம்பி தீனா (18) மற்றும் சிவகங்கை ராஜா சத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் ( 26) காமராஜர் காலனியைச் சேர்ந்த கௌதம் ( 22) ஆகிய நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து இன்று காலை சுமார் 6 மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த விசாரணையில் இத்தி ராஜா கடந்த 2021 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவகங்கை உடையார் சேர்வை ஊருணி அருகே முத்துக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் ஆவார். இந்த கொலை வழக்கில் இருந்து இவர்களை காப்பாற்றுவதற்கு ராஜபாண்டி உதவி செய்ய மறுத்ததாகவும் அதனால் ஏற்பட்ட தகராறில் ராஜபாண்டியை கொலை செய்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி