உத்தரப் பிரதேசம்: மீரட் மாவட்டத்தில் மொயின் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று மொயினை பார்க்க அவரது சகோதரர் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீடு பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸ், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மொயின், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.