குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் தனியார் பள்ளியில், 8 வயது சிறுமி ஒருவர் 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று (ஜன.10) காலை பள்ளி வந்த சிறுமி, ஒரு பெஞ்சில் அமர்ந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்தார். இதனை கண்ட ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.