துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர்ஸ் கார் ரேஸில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார். இதில் இன்று நடந்த ரேஸில் இந்தியாவைச் சேர்ந்த அஜித்குமார் 7ஆவது இடம் பிடித்து அடுத்து சுற்றுக்குத் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அஜித் ரசிகர்கள் மேளம் தாளம் முழக்கத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் அஜித் கார் ஒட்டும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.