சிவகங்கை அழகுமெய்ஞானபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் திருக்கோவிலில் 17 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது இவ்விழா கடந்த 19ஆம் தேதி அன்று கணபதி ஹோமம் காப்பு கட்டுதல் வைபவத்துடன் விழா துவங்கியது விழாவின் சிகர நிகழ்ச்சி ஆன விநாயக பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெற்றது முன்னதாக மூலவர் ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் பெருமானுக்கு வண்ணமலர் மாலைகள் மற்றும் அருகம்புல் மாலைகள் கொண்டு சர்வ அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து அருகம்புல் கொண்டு அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை மற்றும் ஏக முக ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபாடு செய்தனர் விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மங்கள பொருட்கள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது விழாவை அழகு மெய்ஞானபுரம் ரோஸ் நகர் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்