திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் கொள்முதல் செய்யப்படும் ஊர்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாகவும், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டியும் நேற்று திருப்பூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகமாக இருந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,600 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1200 முதல் ரூ.1400-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.