வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண் தட்டுகள் கண்டெடுப்பு

75பார்த்தது
வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண் தட்டுகள் கண்டெடுப்பு
விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை சுடுமண் பானைகள், கண்ணாடி மணிகள், சங்கினால் ஆன வளையல்கள், சுடுமண் உருவ பொம்மைகள், சதுரங்க காய்கள் உள்ளிட்ட 3,000-க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட 16வது குழியில் இருந்து சுடுமண் பானை மற்றும் தட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் கலைநயத்தை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி