டங்ஸ்டன் விவகாரத்தை மீண்டும் மீண்டும் கிளப்பி மதுரை மக்களை குழப்பப் பார்க்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (ஜன., 11) பேசிய அவர்,
நான் முதலமைச்சராக இருக்கும்வரை டங்ஸ்டன் திட்டம் வராது. டங்ஸ்டன் திட்டம் வந்தால் பதவியில் இருக்கமாட்டேன். பேராடுவது தவறல்ல. அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராடலாம். சுரங்க அனுமதி மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவு அளித்தது என்று குற்றம்சாட்டினார்.