மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக்கை சேர்ந்த நபர் ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வந்தார். திருமண வயதில் உள்ள அவருக்கு தந்தை பெண் பார்த்த நிலையில் சரியான வரனும் அமைந்தது. ஆனால் இதன்பின்னர் விபரீதமாக, அந்த பெண்ணுக்கும் இளைஞரின் தந்தைக்கும் காதல் ஏற்பட்டு அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். இதனால் விரக்தியடைந்த மகன் துறவியாக மாற முடிவெடுத்த நிலையில் உடைமைகளுடன் சாலையோரத்தில் வசிக்க தொடங்கியுள்ளார்.