தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தேரிக்காடுகள். செம்மண் மேடுகளும், சிறு குன்றுகளும் கொண்டு நீரை மிகுதியாக தக்க வைக்க முடியாமல் வறண்டிருக்கும் நிலப்பகுதியாகும். இது 12,000 ஏக்கர்கள் அல்லது 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு வாழும் மக்கள் பனைத் தொழில்களையே நம்பியுள்ளனர். நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனை ஓலை பெட்டிகள், பாய் நெய்வது ஆகியவை இந்தப் பகுதி மக்களின் முக்கிய தொழில்களாகும்.