சம்சாரம் அது மின்சாரம், அலைகள் ஓய்வதில்லை போன்ற பல படங்களில் நடித்துள்ள கமலா காமேஷ் (72) உயிரிழந்து விட்டதாக செய்திகள் தீயாக பரவியது. இந்நிலையில் கமலா காமேஷ் நலமுடன் இருப்பதாக அவரின் மகளும், நடிகையுமான உமா ரியாஸ் தெரிவித்துள்ளார். "மறைந்தது எனது மாமியாரும், நடிகர் ரியாஸ் கானின் தாயாருமான ரஷிதா பானு (72) தான். ஆனால் குழப்பத்தில் இப்படியான செய்திகள் வெளியாகிவிட்டது" என விளக்கமளித்துள்ளார்.