வெள்ளாரப்பன் (எ)முத்தையா அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா

73பார்த்தது
சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் கிராமத்தில் வெள்ளாரப்பன்(எ)முத்தையா அய்யனார் கோயிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேகத்திற்காக கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பூஜைகள் கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலை பூர்ணா குதி நடைபெற்று முடிந்தவுடன் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை சுற்றி வலம் வந்து ராஜ கோபுரத்திற்கும் மற்ற பரிவார தெய்வங்களின் கோபுரத்திற்கும் கொண்டு சென்றனர். பின்னர் புனித நீரை கோபுரத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தின் போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வெள்ளாரப்பன் என்ற அய்யனாருக்கும் கோயிலின் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேலப்பிடாவூர், குலக்கட்டப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டு மக்கள் செய்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி