சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வைகை ஆற்றின் வடகரையில் செயல்பட்டு வருகிறது. 800 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். பள்ளி எதிரே ஐந்து ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளது. , இந்த மைதானத்தின் உள்ளேயே வட்டார கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. வட்டார கல்வி மையத்தில் 13 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். திருப்புவனம் வட்டாரத்த்தில் உள்ள 43 பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் சீருடைகள், நோட்டுகள், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகிறது. வழக்கமாக காலை ஒன்பது மணிக்கு வட்டார கல்வி மையம் திறக்கப்படும் இன்று காலை அலுவலகம் வந்த போது வெளிப்புற கேட்டின் மேல் வேறு பூட்டு போடப்பட்டிருந்து. விசாரணையில் திருப்புவனத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் வட்டார கல்வி மைய அலுவலகத்தையும் விளையாட்டு மைதானத்தையும் பூட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் விசாரணையில் சொக்கலிங்கத்தின் தந்தை அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க ஒரு பகுதி நிலத்தை தானமாக வழங்கியதும், அதனை அதிகாரிகள் பதிவு செய்யாமல் வாய்மொழியாகவே 80 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. 50 ஆண்டுகள் கழித்து தற்போது வந்து இடம் தனக்கு சொந்தம் என கூறி சொக்கலிங்கம் பூட்டு பூட்டியுள்ளார். இதனையடுத்து போலீசார் சொக்கலிங்கத்தை சமாதானம் செய்து திறக்க செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.