அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். தமிழக நலத்திட்டங்கள் சார்ந்த கோரிக்கை மனுவை இன்று (செப்., 27) பிரதமர் மோடியை சந்தித்து வழங்கினார். தொடர்ந்து, டெல்லியில், சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அவருடன் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.