ஆட்சியில் பங்கு என்பது விசிகவின் கொள்கை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர், "ஆட்சியில் பங்கு என்பது விசிகவின் கொள்கையாக இருக்கலாம். அவர்கள் தொடர்ந்து அதை சொல்லி வருகிறார்கள், புதிதாக சொல்லவில்லை. ஊடகங்கள்தான் அதைப் பெரிதுப்படுத்துகின்றன” என்று பேட்டியளித்துள்ளார்.