தென்னை மகசூலை காண்டாமிருக வண்டானது மிகுந்த சேதத்தை உண்டாக்கும் பூச்சியாகும். இதனை அழிக்க, மின் விளக்கு பொறிகளை வைத்து அதன் வெளிச்சத்திற்கு கீழே விழுகின்ற ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்க வேண்டும். ஆமணக்கு பிண்ணாக்கு 2½ கிலோ ஈஸ்ட் 5 கிராம் (அ) அசிடிக் அமிலம் 5 மிலி கலவையில் நீளவாக்கில் வெட்டப்பட்ட இளம் இலைமட்டைத் துண்டுகளை நனைத்து ஏக்கருக்கு 30 வீதம் தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கவும்.