புதுச்சேரியில் தீபாவளிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷனில் இலவச அரிசி தரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்புதலை பெற்று நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உள்ளதால் எங்களுக்குத் தேவையான நிதியை எப்போதும் மத்திய அரசு தரும். பிரதமர் மோடியை எப்போது வேண்டுமானாலும் நாங்கள் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.