சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே மந்திக்கண்மாய் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ். இவர் இளையான்குடி அருகே உள்ள நெஞ்சத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பள்ளி மாணவிகளிடம் இவர் நீண்ட காலமாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மேரி ஆனந்தி கல்வித்துறைக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கல்வித்துறையினர் பள்ளி மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கல்வித்துறை அறிவுறுத்தலின்படி தலைமை ஆசிரியை மேரி ஆனந்தி ஆசிரியர் மைக்கேல் ராஜ் மீது சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆசிரியர் மைக்கேல் ராஜை இன்று(செப்.17) இரவு சுமார் 8 மணியளவில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.