சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இளமனூரைச் சேர்ந்தவர் மனோபாலன்(33). இவரும், அவரது சகோதரரும் பெரும்பச்சேரியில் உள்ள ஓர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நாகநாதபுரத்தைச் சேர்ந்த சண்முகபாண்டியன் (38), மனோபாலனிடம் தகராறு செய்து கத்தியால் குத்தினார்.
பலத்த காயமடைந்த மனோபாலனை மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சண்முகபாண்டியனை கைது செய்தனர். இன்று (செப்.,22) கைது செய்த சண்முகபாண்டியன் குறித்து எந்த தகவலும் இல்லை. அவர் எங்கு இருக்கிறார். அவரை காவல்துறையினர் அடித்து கொலை செய்துவிட்டனர் எனக்கூறி நாகநாதபுரம் கிராம மக்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்னர்.
இதனால் நைனார் கோவில் பரமக்குடி சாலையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மேலும் போக்குவரத்தானது மாற்றுப்பாதை மூலம் மாற்றபட்டு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வரவழைக்கப்பட்ட நிலையில் போராட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தள்ளுமுள்ளானது ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று (செப்.22) மதியம் சுமார் ஒரு மணி அளவில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.