சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் மற்றும் இளமநாச்சியம்மன் கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
வட்ட வடிவ மைதானத்தின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும். ஒவ்வொரு காளையையும் அடக்க 9 மாடுபிடி வீரர்கள் களம் இறங்க வேண்டும். மேலும், காளைகளை 25 நிமிடத்திற்குள் அடக்க வேண்டும் என்ற நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் காளைகளை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாகவும், அடக்க தவறினால், காளைகள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் நிலையில், இந்த போட்டியில் மொத்தம் 17 காளைகள் பங்கேற்ற நிலையில், 153 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க களமிறக்கப்பட்டன.
ஒரு மாட்டிற்கு 25 நிமிடம் போட்டி நேரமாகநிர்ணயிக்கப்பட்டது. இந்த நேரத்தில் 9 மாடுபிடி வீரர்கள் மாட்டை பிடித்தால் அவர்களுக்கு பரிசும், கேடயங்களும் வழங்கப்பட்டன. மாட்டை பிடிக்காவிட்டால் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன.
இந்த போட்டியில் ஆறு வீரர்கள் காயமடைந்து மருத்துவ குழு மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த போட்டியை இலுப்பக்குடி , அரசனூர், குமாரப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள்இன்று கண்டுகளித்தனர்.