ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்து (வீடியோ)

61பார்த்தது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே, திருமலையப்பபுரம் நான்கு ரோடு சந்திப்பில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளத்தில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. நேற்று அந்த பள்ளத்தில் பைக்கில் சென்ற இருவர் நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தனர். இந்நிலையில், இன்று பெண்ணுடன் பைக்கில் பைக்கில் சென்றவர் அதே பள்ளத்தில் தவறி விழுந்தார். இதன் சி.சி.டி.வி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி