தமிழ் மண்ணைக் காத்த வீரத்தாய் குயிலி அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையை இன்று (9-10-2024) காணொளி வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்திய சுதந்திரப் போருக்கு எண்ணற்ற வீரர்களை தந்த சமூகமான அருந்ததியர் சமூகத்தில் பிறந்து வளர்ந்த வீரத்தாய் குயிலி அவர்களுக்கு சிலை அமைத்து தர வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை சார்பில் கோரிக்கையை அய்யா அதியமான் அவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்தார்.
இதை கனிவுடன் ஏற்ற திமுக தலைவர் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் சிலை அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். இதை நிறைவேற்றித் தரும் விதமாக சிவகங்கை வீரமங்கை வேலுநாச்சியார் மணி மண்டபம் அமைந்த பகுதியில் வீரத்தாய் குயிலி அவர்களுக்கு நிழற்மண்டபத்துடன் கூடிய சிலை நிறுவப்பட்டது.
அதன் திறப்பு விழாவினை இன்று சிவகங்கையில் மாண்புமிகு அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மானா மதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடியார் முன்னிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.