சிவகங்கை நகராட்சி லாரியை சிறைபிடித்ததால் பரபரப்பு

2206பார்த்தது
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் தினசரி சுமார் 13 டன் அளவிலான குப்பைகள் நகராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை சிவகங்கை அருகே உள்ள சுந்தரநடப்பு கிராமத்தின் அருகே 13.5 ஏக்கர் அளவிலான நிலம் நகராட்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டு அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு பயோ மைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்தனர்.

இந்நிலையில் அந்த குப்பை கிடங்கு முறையாக செயல்படததன் காரணமாகவும் குப்பைகளை அதிகளவில் தேக்கியதாலும் மழை காலங்களில் அங்கிருந்து கழிவு நீர் வெளியேறி அருகில் உள்ள சுந்தரநடப்பு பகுதியில் விவசாய நிலத்திற்கு சொந்தமான கண்மாயில் கலந்ததாலும் அக்கிராம மக்கள் அந்த குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

குப்பை கிடங்கு அகற்றப்படாததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் அந்த குப்பை கிடங்கு செயல்பட தடை விதித்த நிலையில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி வளாகப் பகுதிகளில் குப்பையை கொட்டி வந்தனர். அதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிபி காலனி இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள மயான பகுதியில் குப்பையை கொட்டி வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்
நகராட்சி லாரியை சிறைபிடித்தனர்.

தொடர்புடைய செய்தி