முதல்வர் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்

70பார்த்தது
முதல்வர் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்
மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் நாளை செவ்வாய்க்கிழமை ஜிரிபாம் பகுதிக்கு வருகை தருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை முதல்வரின் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இவர்களின் தாக்குதலில் மொய்ராங்தெம் அஜேஷ் என்ற பாதுகாப்பு அதிகாரி பலத்த காயம் அடைந்தார். தோளில் குண்டு காயத்துடன் இருந்த அவரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீஸ் கமாண்டோக்கள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் இணைந்து அப்பகுதியில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.