தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

65பார்த்தது
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன் 10) முதல் திறக்கப்படுகின்றன. இதை முன்னிட்டு கடந்த 1 மாதத்துக்கு மேலாக பூட்டிக்கிடந்த பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. வகுப்பறைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தும் வளாகத்தை தூய்மை படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி