காதலனுடன் ஓடிய மனைவி.. கணவனுக்கு வைத்த செக்!

50பார்த்தது
காதலனுடன் ஓடிய மனைவி.. கணவனுக்கு வைத்த செக்!
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கவுதம் என்பவர் பூஜா என்ற பெண்ணை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த நிலையில், சமூக வலைதளம் மூலம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வினோத் என்பவருடன் பூஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில வருடங்கள் கழித்து கணவனை பிரிந்து காதலனுடன் அவர் சென்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த கவுதம் மீண்டும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த பூஜா மீண்டும் கணவரிடம் வந்து பிரச்சனை செய்துள்ளார்.

முறையாக விவாகரத்து செய்யாமல் மறுமணம் செய்து கொள்வது சரியல்ல என்று கூறிய பூஜா, தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கோரி கணவனை பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி