சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து கல்லுக்கட்டி, மெ. மெ வீதி வழியாக தேவகோட்டைக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்நிலையில்,
கீழ ஊரணி பகுதியில் நடப்பட்டுள்ள மின் கம்பம் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளதாக பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும் சாலையின் மேலே மின் கம்பம் இருப்பதால் அதில் வாகனங்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், மின்கம்பத்தை அகற்றி வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர் பகுதி மக்கள்.