சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் மாநகர செயலாளர் சோ. மெய்யப்பன் தலைமையில்
கழக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி அதிமுக என்னும் மாபெரும் கோட்டையை புரட்சித்தலைவர் துவங்கி 52 ஆண்டுகள் முடிவடைந்து 53 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தமிழகத்தை 32 ஆண்டுகள் ஆண்ட கட்சி அதிமுக மட்டுமே என்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியவர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை அவரது மகன் உதயநிதி கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை அவரது தங்கை கனிமொழி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரணம் மதுவிலக்கு என்று கூறினார் அதையும் நிறைவேற்றவில்லை 2026 ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சி அண்ணன் எடப்பாடி தலைமையில் அமையும் என்றார் சிவகங்கை எம். எல். ஏ P. R செந்தில்நாதன் காரைக்குடி மாநகராட்சி மேயர் அதிமுக மாமன்ற உறுப்பினர்களை அவையை விட்டு வெளியேற்றுவதும் அவர்கள் வார்டுகளை புறக்கணிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இது போல் செயல்பட்டால் அதிமுக சார்பில் மாநகராட்சியை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.